slokas and mantras.in

Listern.. Learn.. Chant.. Simple Mantras

மந்த்ரம்

மந்த்ரம் என்பது என்ன?
மந் – நினைப்பது (மனது) : த்ரம்; – கருவி.

மனதை சரியான வழியில் இயக்கி, நல்லதையே எண்ண செய்து, நலம் பயக்கும் ஒரு கருவி. எப்படி காலையில் 45 நிமிட நேர நடைபயிற்சி உடலுக்கு நல்லதோ, 20 நிமிட மந்திர உச்சாடனம், மனதிற்கு நல்லது. விரைவில் கோபம், பயம், துக்கம் அண்டாது.

பயம் வேண்டாமே: மந்திரம், கடவுள், துதிக்கும் முறைகள், ஆசாரங்கள் போன்றவற்றில் பயமே தேவையில்லை. ஜபம் செய்வது அவ்வளவு எளியது. இந்து மதம் அத்தனை சுலபமானது. கடவுளின் பெயரால் செய்யப்படும் அனைத்து நல்லதும் கடவுளினால் ஏற்கப்படும். ஜாதி, மத, இன, நிற வேறுபாடு எதுவும் கடவுளுக்கு இல்லை. இருந்தால், அவர் கடவுள் இல்லை. கடவுளுக்கு நமது பாசமும், பக்தியும் மட்டுமே தேவை. பயம் தேவையில்லை.

கடவுள் – மந்திர பிரயோகம் (உச்சரிப்பு) – பூஜை முறை – தவறுகள் நேர்ந்திடல் – கடவுளின் தண்டனை – இனி எந்த பயமும் தேவையேயில்லை

இந்து கடவுளர்கள் நம் தாயைவிட கனிவானவர்கள் என்கிறது சாஸ்திரம். தாய் எங்கேயாவது குழந்தையை தண்டிப்பாரா? பிறந்த குழந்தை எப்படி அழுதாலும், தாய்க்கு புரியும்… குழந்தைக்கு பால் தேவையா? (அ) நீர் தேவையா என்று?. அதைப்போல், நீங்கள் தவறாக உச்சரித்தாலும் உங்கள் கோரிக்கைகள் கடவுளுக்கு தெரியும். எனவே, உச்சரிப்பு பயம் தேவையேயில்லாதது.

அழுத குழந்தைக்கு பால் கிடைக்கும்.: ஒரு குழந்தை அழும்போதே, அதன் பசி தாய்க்கு தெரியும். அதைப்போல், நாம் மந்திரத்தின் மூலம் கேட்கும்போது, அது இறைவனின் காதுகளை அடைந்து, அவரின் கவனத்தினை நம் பக்கம் இழுத்து பலனடைய உதவும்.
கடவுள் வேதம் மற்றும் சாஸ்திரம் தெரிந்த வேத, மந்திர விற்பன்னர்களுக்கே உதவிடுவார் என்பது மிகத்தவறு. கடவுளுக்கு தேவை அவன்பால் அன்பு, உண்மை, காதல், பக்தியே. இவை நான்கும் வேத அறிவு, மந்திர உச்சாடன திறமையை விட பல பல பல மடங்கு பெரியவை. எனவே பயம் வேண்டாம்.

தவறான மந்திர உச்சாடனத்தினால், வாழ்க்கையில் அழிவு ஏற்பட்டது என்று கூறிய சான்றுகளெல்லாம், இராஷஸன்களையே (இராவணன், கும்பகர்ணன்) எடுத்துக்காட்டாக கூறியவை. ஆனால், வால்மீகி என்ற கொள்ளையன், மரா, மரா என்று கூறியதை ராம, ராம என்று கடவுளால் அங்கீகரிக்கப்பட்டு அவர் இராமாயணம் இயற்றினார் என்பது தங்களுக்கு தெரிந்து இருக்கும். ஆனால், மற்றொரு உண்மை உங்களுக்கு தெரியுமா? 18 புராணங்களில், ஒரு புராணம் (இராமாயணம்) மட்டுமே மனிதனால் (வால்மீகி) எழுதப்பட்டது. மற்ற 17 புராணங்களும் வியாஸர் என்ற விஷ;ணுவின் ருபத்தினால் (வியாஸாய விஷ;ணு ரூபாய வியாஸ ரூபாய விஷ;ணவே) எழுதப்பட்டன. ஆனாலும் மனிதனால் எழுதப்பட்ட ராமாயணமே, 18ல் தலை சிறந்ததாக கருதப்படுகிறது.

இவைகள் எதற்காக கூறப்பட்டவை என்றால், ஒரு தவறான மனிதன், தவறான எண்ணங்களுடன், தவறான குறிக்கோளுக்காக, மிக சரியான வழிமுறையை பின்பற்றினாலும், அவன் தோற்றுத்தான் போவான். ஆனால், நல்ல காரியத்திற்காக, நல்ல எண்ணத்துடன், நல்லவன் செய்யும் முயற்சி சில பல தவறுகள் இருந்தாலும் சரியான பலனையே தரும் என்பதற்காகவே.

இந்த ஸ்வயம்வர பார்வதி முயற்சியே அணைவரையும் மந்திரங்களை தைரியமாக சொல்ல வைத்து, கடவுளிடம் துளியும் பயமின்றி தாயைப்போல் அன்பால் பக்தி செலுத்திட உதவுவதே.

3 Comments

Add a Comment
  1. Sir
    Pl forward me ” varanamayiram ” in English and Tamil for my children to chant.
    Any other sloga for early marriage settlement also required
    Thanks and Regds

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slokas and mantras.in © 2014 Frontier Theme